பல்கலைக்கழகத்திற்கு அருகில் போதைப்பொருளுடன் பெருந்தொகை பணம் மீட்பு !

user 02-May-2024 இலங்கை 6 Views

ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் குற்றவாளியான டுபாய் கபிலாவுக்கு சொந்தமான பெருந்தொகை போதைப்பொருளை  பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

13 கிலோ ஹெரோயின், 6 கிலோ ஹாஷ், 500 கிராம் கொக்கெய்ன் என்பன கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருட்களில் அடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த பொதியில் 1.5 மில்லியன் ரூபா பணமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

 

 

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை