தேசபந்து மீதான நீதிமன்ற உத்தரவு: தேர்தல் மீதான தாக்கம் தொடர்பில் பெபரல் அமைப்பு விளக்கம்

user 24-Jul-2024 இலங்கை 22 Views

பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் பதவி வகிக்கமுடியாது என தெரிவித்து உயர் நீதிமன்றம் இன்று காலை இடைக்கால தடை உத்தரவினை பிறப்பித்துள்ளது.

பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமிக்க ஜனாதிபதி எடுத்த தீர்மானத்தை வலுவற்றதாக்கி, உத்தரவிடுமாறு கோரி  தாக்கல் செய்யப்பட்ட ஒன்பது அடிப்படை உரிமை மனுக்களும், இன்று மீள பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே உயர் நீதிமன்றம் இந்த தடை உத்தரவினை பிறப்பித்துள்ளது.

குறிப்பாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைஉள்ளிட்ட 8 பேரினால்; இந்த மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

நீதியரசர்களான யசந்த கோதாகொட, மஹிந்த சமயவர்தன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த மனுக்களின் பரிசீலிக்கப்பட்டிருந்தன.

 

பொலிஸ் மா அதிபராக நியமிக்க ஜனாதிபதியால் சிபாரிசு செய்யப்பட்ட தேஷ்பந்து தென்னகோனின் நியமனம் அரசியலமைப்பு சபையினால் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை என மனுதாரர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

எனவே, அவரை நியமித்த ஜனாதிபதியின் முடிவு சட்டத்திற்கு முற்றிலும் எதிரானது என்றும் மனுதாரர்கள் வலியுறுத்தியிருந்த நிலையில் உயர் நீதிமன்றம் இந்த தடை உத்தரவினை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை