மனைவியின் புற்றுநோய் சிகிச்சைக்கு பணம் திரட்ட ரஷ்ய கூலிப்படையில் இணைந்த இலங்கையர்

user 16-May-2024 இலங்கை

இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த தனது மனைவியின் அறுவை சிகிச்சைக்கு பணம் திரட்டுவதற்காக ரஷ்ய கூலிப்படையில் இணைந்த இலங்கையர் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.

குருநாகல்(Kurunegala) கும்புக்கடே பிரதேசத்தைச் சேர்ந்த எரந்த சிந்தக தென்னக்கோன் என்பவரே இவ்வாறு ரஷ்ய கூலிப்படையில் இணைந்தவராவார்.

ரஷ்ய போர்க்களத்தில் நெற்றியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட எரந்த வைத்தியசாலையில் இருந்து தப்பித்து நண்பர் ஊடாக இலங்கை வந்துள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

மனைவியை காப்பாற்ற அவர் ரஷ்ய கூலிப்படையில் இணைந்த போதிலும் அவர் நாட்டிற்கு வருவதற்கு முன்பே அவரது மனைவி கடந்த மார்ச் மாதம் உயிரிழந்துவிட்டார்.

 

 

 

 

 

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை