பிரபல நடிகைக்கு IPL டிக்கெட் வாங்கி கொடுத்த நடிகர் விஜய்

user 09-May-2024 பொழுதுபோக்கு

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் தற்போது Goat திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.

Goat படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் தளபதி 69 திரைப்படத்தை ஹெச். வினோத் இயக்கப்போகிறார் என கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என தகவல் தெரிவிக்கின்றனர்.

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இன்று தென்னிந்திய அளவில் பிரபலமாகியுள்ள நடிகை வரலக்ஷ்மி சரத்குமார். சமீபத்தில் தெலுங்கில் வெளிவந்த ஹனுமன் திரைப்படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

இந்த நிலையில், அண்மையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை வரலக்ஷ்மி சரத்குமார், 'நான் பார்த்த முதல் இரண்டு IPL போட்டிகளின் டிக்கெட் வாங்கி கொடுத்ததே தளபதி விஜய் தான்' என கூறியுள்ளார். இந்த விஷயம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. 

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை