பிரித்தானிய மன்னர் இறக்கவில்லை : போலி செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தூதரகம் !

user 20-Mar-2024 உலகம் 6 Views

பிரித்தானிய மன்னர் 3 ஆம் சார்ஸ் உயிரிழந்து விட்டதாக வெளியான செய்திகள் அனைத்தும் வெறும் வதந்தி என பிரித்தானிய தூதரகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

 

பிரித்தானிய மன்னர் 3 ஆம் சார்ல்ஸ்க்கு தற்போது வயது 75.

இந்நிலையில் பிரித்தானிய மன்னர் 3 ஆம் சார்ல்ஸ், புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாக பக்கிங்காம் அரண்மனை கடந்த மாதம் தெரிவித்திருந்தது.

இதற்கிடையே, ரஷ்ய ஊடகங்களில் பிரிட்டன் மன்னர் சார்ல்ஸ் உயிரிழந்து விட்டதாக நேற்று செய்திகள் வெளியாகின.

இதனையடுத்து ரஷ்யா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் இந்த செய்தி பரவியது.

அதாவது இங்கிலாந்து அரச குடும்பத்தினர் அதிர்ச்சியில் உள்ளதாக தகவல் வெளியிட்ட ரஷ்ய ஊடகங்கள், மன்னர் சார்ல்ஸ் குறித்த போலி புகைப்படங்களையும் இணைத்திருந்தன.

இதையடுத்து, தஜிகிஸ்தானில் முன்னணி செய்தி நிறுவனம் ஒன்று சார்லஸ் மன்னருக்கு இரங்கல் செய்தியையும் வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், இங்கிலாந்து தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மன்னர் சார்லஸ் இறந்துவிட்டதாக வெளியான தகவல் வதந்தி. மன்னர் சார்லஸ் உயிருடன் இருக்கிறார் என தெரிவித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை