விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ ஜூன் 14-ல் ரிலீஸ்!

user 06-Jun-2024 பொழுதுபோக்கு

விஜய் சேதுபதியின் 50ஆவது படமான ‘மகாராஜா’ திரைப்படம் இம்மாதம் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதியின் 50வது படமாக தயாராகியுள்ள ‘மகாராஜா’ படத்தை ‘குரங்கு பொம்மை’ இயக்குநர் நிதிலன் சுவாமிநாதன் இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் மம்தா மோகன்தாஸ், அனுராஜ் காஷ்யப், நட்டி நடராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அஜனீஷ் லோகநாத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி சலூன் கடைக்காரராக நடித்துள்ளார். அண்மையில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில், இப்படம் வரும் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி நடிப்பில் இந்த ஆண்டு தொடக்கத்தில் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ படம் வெளியானது. அடுத்து அவரது நடிப்பில் ‘விடுதலை 2’ படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை