ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழி !!

user 12-Jun-2024 உலகம் 4 Views

ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ், ஓரினச்சேர்கையாளர்கள் குறித்து கடுமையான வசைமொழியை பயன்படுத்தியுள்ளமை தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள புனித நகரமான வத்திக்கான் (vatican) திருச்சபையில் கடந்த மே மாதம் 20 ஆம் திகதி, பாப்பரசர் பிரான்சிஸ்க்கும், பேராயர்களுக்கும் (bishops) இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது, வத்திகானில் புரோசியாஜினே (Frociaggine) காற்று வீசி வருவதாகவும், ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் இளைஞர்களை செமினரிக்குள் அனுமதிக்காமல் இருப்பதே நல்லது எனவும் பாப்பரசர் பிரான்சிஸ் குறிப்பிட்டுள்ளார்.

புரோசியாஜினே (Frociaggine) என்பது ஓரினச்சேர்க்கையாளர்களை குறிக்கும் இத்தாலிய வசை மொழி என குறிப்பிடப்படுகினறது.

புரோசியாஜினே (Frociaggine) என்ற சொல் ஆங்கிலத்தில் Fagotness என்று பொருள்படும். இந்த வார்த்தை “இயற்கையை மீறிய மயக்கம்” என்ற பொருளில் ஓரின சேர்க்கையாளர்களை குறிக்கிறது.

இந்நிலையில், பாப்பரசரின் இந்த கருத்து தற்போது இத்தாலிய ஊடகங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

பாப்பரசர் பிரான்சிஸ் இதற்கு முன்னரும் இந்த வசைமொழியை பயன்படுத்தியிருந்த நிலையில், அது சர்சையை ஏற்படுத்தியதையடுத்து, அதற்கு அவர் கடந்த மாதம் மன்னிப்பு கேட்டிருந்தார்.

இந்நிலையில், மீண்டும் அவர் Frociaggine என்ற வசைமொழியை பயன்படுத்தியுள்ளார்.

87 வயதாகும் பாப்பரசர் பிரான்சிஸ், கடந்த 11 ஆண்டு காலமாக திருத்தந்தையாகவுள்ள நிலையில், LGBT சமூகத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவர் கொண்டவர் என விமர்சிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை