ஆழ்துளை கிணற்றில் விழுந்த 14 மாத குழந்தை !

user 04-Apr-2024 இந்தியா 4 Views

கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டம் இன்டி தாலுகா லச்சனா கிராமத்தை சேர்ந்த 14 மாத சாத்விக் என்ற குழந்தை மூடப்படாமல் இருந்த 500 அடி ஆழம் உள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளார்.

இந்த சம்பவமானது நேற்று(03) மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், சதீஷ் முஜகொண்டா (30) இவரது மனைவி பூஜா (26) இவர்களுடைய 14 மாத ஆண் குழந்தையான சாத்விக் என்பவரே இவ்வாறு ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளார்.

அதாவது குறித்த பெற்றோரிற்கு சொந்தமான நான்கு ஏக்கர் நிலத்தில் கரும்பு மற்றும் எலுமிச்சை பயிரிட்டிருந்த நிலையில் தற்போது மழையில்லாததால் பயிர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்தையடுத்து சதீஷ் முஜகொண்டாவின் தந்தை சங்கரப்பா என்பவர் விவசாய நிலத்தில் ஆழ்துளை கிணறு தோண்டியுள்ளார்.

இவ்வாறு 500 அடி தோண்டியும் தண்ணீர் கிடைக்காமையால் அவர் அதை மூடாமல் விட்டுவிட்ட நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் சதீஷ் முஜகொண்டாவின் 14 மாத குழந்தை சாத்விக் மூடப்படாமல் இருந்த 500 அடி ஆழம் உள்ள ஆழ்துளை கிணறு அருகே விளையாடி கொண்டிருந்த போது ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையை மீட்கும் பணியை தொடங்கிய நிலையில் குழந்தை சாத்விக் 16 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து முதல் கட்டமாக மீட்பு குழுவினர் ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தைக்கு பைப் மூலம் ஒட்சிசன் செல்ல ஏற்பாடு செய்ததுடன் மேலும் ஆழ்துளை கிணற்றுக்குள் கமராக்களை(Camera) உள்ளே விட்டு குழந்தையின் அசைவை தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர்.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை