தீபாவளி கொண்டாட்டத்தில் விபரீதம் - பரிதாபமாக உயிரிழந்த தமிழ் குடும்பஸ்தர்

user 09-Nov-2026 இலங்கை 4 Views

பதுளையில் தீபாவளிப் பண்டிகைக்கு பலகாரங்களை செய்து தர முடியாது என மனைவி கூறியதால் மனவேதனை அடைந்த கணவன் உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மடோல்சிம, பிரதேசத்தை சேர்ந்த 38 வயதான செல்வாராஜ் குணநாதன் என்ற இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் எனது கணவர். எங்களுக்கு திருமணமாகி 16 ஆண்டுகள் ஆகின்றன. எனது கணவர் முச்சக்கர வண்டி ஓட்டி வருகிறார்.

நான் தோட்டத் தொழிலாளியாக வேலை செய்கிறேன். எங்களுக்கு 8 வயது மகனும், 3 வயது மகளும் உள்ளதாக உயிரிழந்த நபரின் மனைவி தெரிவித்துள்ளார்.

தீபாவளிக்கு பலகாரங்களை செய்து தருமாறு அவர் என்னிடம் கேட்டார். உடல்நிலை சரியில்லாததால் இப்போது முடியாது, நாளைக்குச் செய்கிறோம் என்று நான் கூறினேன். அது குறித்து அவர் சற்று மனவேதனையுடன் இருந்தார்.

பின்னர் எனது கணவர்  கையிலிருந்த 5000 பணத்தை எடுத்துக்கொண்டு நன்கு மதுபானம் அருந்தி நிலையில் வீட்டிற்கு வந்தார்.

மறுநாள் காலையில் பார்க்கும் போது, கணவர் மின்சார வயரால் சமையலறையில் தூக்கில் தொங்கி உயிரிழந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன் என மனைவி குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை