சவூதியில் இருந்து நாடு திரும்பிய பெண் கடத்தப்பட்டு துஷ்பிரயோகம்; 13 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான நகை, பணம் கொள்ளை!

user 09-Nov-2026 இலங்கை 5 Views

சவூதி அரேபியாவில் இரண்டு வருடங்களுக்கும் மேலாகப் பணிபுரிந்துவிட்டு, பெரும் எதிர்பார்ப்புகளுடன் தாயகம் திரும்பிய 33 வயதுடைய தமிழ்ப் பெண்ணொருவர் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்புப் பகுதியில் கடத்தப்பட்டு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நண்பியொருவரின் பொதியை ஒப்படைப்பதற்காகச் சென்ற குறித்த பெண்ணுக்கு, வாடகை வாகனச் சாரதி மற்றும் அவருடன் தொடர்புடைய குழுவினர் போதைப்பானம் வழங்கியுள்ளனர். இதனால் மயக்கமடைந்த நிலையில் இருந்த பெண் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், அவரிடமிருந்த 13 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கொள்ளைச் சம்பவத்தின் பின்னர், குறித்த பெண் தவறான முறையில் நடத்தப்பட்டு முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு அருகில் கைவிடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மயக்கமடைந்த நிலையில் காணப்பட்ட பெண்ணை பொலிஸார் மீட்டு, வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நினைவு திரும்பிய பின்னர் அவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், மாவட்ட சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் வழிகாட்டலில் முல்லைத்தீவு பொலிஸார் சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இச்சம்பவம், வெளிநாடுகளில் பணிபுரிந்து தாயகம் திரும்பும் பெண்களின் பாதுகாப்பு தொடர்பில் மீண்டும் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அறிமுகமற்ற நபர்களுடன் பயணிப்பது மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் இச்சம்பவம் உணர்த்தியுள்ளது.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை