மட்டக்களப்பில் மாதுளை பதப்படுத்தும் நிலையத்தை திறந்து வைத்த கிழக்கு ஆளுநர்

user 06-Apr-2024 இலங்கை

மட்டக்களப்பு (Batticaloa)  - ஏறாவூர்பற்றில் மாதுளை சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையம் ஒன்றை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் (Senthil Thondaman) திறந்து வைத்துள்ளார்.

விவசாயிகள் மத்தியில் பழச் செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் குறித்த மாதுளை சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையமானது திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், விவசாயிகளின் விளைச்சலை அதிகரிப்பதற்காக விவசாய சங்கங்களுக்கும் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கும் விவசாய உபகரணங்களை ஆளுநர் வழங்கி வைத்துள்ளார்.

மேலும், இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோபாலரத்தினம் மற்றும் அரச அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். 

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை