இந்தியாவின் மனித உரிமை மீறல்களை சுட்டிக்காட்டிய அமெரிக்க அறிக்கை !

user 26-Apr-2024 இலங்கை 10 Views

இந்தியாவில்(India) இடம்பெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அமெரிக்க(US) வெளியிட்டுள்ள அறிக்கையானது இந்திய தரப்பில் பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கைக்கு கடும் எதிர்ப்பை இந்தியா வெளியிட்டுள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறையின் ’2023ஆம் ஆண்டின் மனித உரிமைகள் அறிக்கையில் உலகின் பேசுபொருளாகிய மணிப்பூர் கலவரம் மற்றும் கனடாவில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை போன்ற சம்பவங்களில் இந்தியாவின் வெயர் அடிக்கோடிடப்பட்டுள்ளது.

சட்டத்திற்கு முரணான கொலைகள், காணாமலாக்கப்படல், கடுமையான சிறை தண்டனைகள், சட்டத்திற்கு முரணான கைது நாடுகடந்த அடக்குமுறை விவகாரம் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதில் நீதிக்கு புறம்பான கொலைகள், பலவந்தமாக காணாமல் போதல், கடுமையான சிறைவாசம், தன்னிச்சையான கைது, நாடுகடந்த அடக்குமுறை ஆகியவை அடங்கும்.

 

அரசாங்க அதிகாரிகள் அல்லது கொள்கைகளை விமர்சித்ததால் பழிவாங்கல், தவறான தகவல் மூலம் தாக்குதல் மற்றும் சமூக ஊடகங்களை பிரசாரத்திற்கு சுதந்திரமாக பயன்படுத்த இயலாமை உள்ளிட்ட எதிர்கட்சிகளின் உறுப்பினர்களால் புகாரளிக்கப்பட்ட தடைகள் குறித்தும் அமெரிக்க அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

குறிப்பாக மேற்கு வங்கத்தில் ஜூலை 8 அன்று தேர்தலுக்கு முன்னதாக 52 பேர் கொல்லப்பட்ட வன்முறையையும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வீடுகள், வணிகங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை அழித்ததோடு, ஆயுத மோதல், பாலியல் அத்துமீறல் மற்றும் தாக்குதல்கள் பற்றிய அமெரிக்காவின் புள்ளி விவரங்களை அமெரிக்க வெளியுறவுத்துறை மேற்கோள் காட்டுகிறது.

ஜம்மு காஷ்மீர் மற்றும் மணிப்பூர் உட்பட வடகிழக்கு மாநிலங்களுக்கு ஐ.நா அதிகாரிகளை அணுக வாய்ப்பில்லாது மட்டுப்படுத்தப்பட்டது எனவும் அமெரிக்க அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

மேலும் இந்திய வருமான வரித்துறை அதிகாரிகள் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் நடத்திய சோதனைகள் குறித்தும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2002 குஜராத் கலவரம் குறித்த ஆவணப்படத்தை குறிப்பிடுகையில், “அரசாங்கம் ஆவணப்படத்தைத் திரையிடுவதைத் தடைசெய்ய அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தியது.

காணொளிக்கான இணைப்புகளை அகற்ற ஊடக நிறுவனங்களை கட்டாயப்படுத்தியது. இந்தியாவில் திரையிட தடை விதிக்கப்பட்டது. பொதுவெளியில் அந்த காணொளியை காண ஏற்பாடு செய்த மாணவர் அமைப்புகள் மீதும் நடவடிக்கை எடுத்தது” என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.

எனினும் , அமெரிக்காவின் இந்த அறிக்கைக்கு வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இந்தியாவைப் பற்றிய மோசமான புரிதலை இது பிரதிபலிக்கிறது என்றும் நாங்கள் அதற்கு எந்த மதிப்பையும் கொடுக்கவில்லை என்றும் அமெரிக்க அறிக்கையை பொருட்படுத்தாது இந்தியா புறக்கணித்துள்ளது எனவும் கூறியுள்ளார்.

 

 

 

 

 

 

 

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை