ஆயுதம் தாங்கிய சகல படையினருக்கும் ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு !

user 16-Sep-2024 இலங்கை 5 Views

நாட்டில் ஏற்படக்கூடிய எந்தவொரு அவசரநிலையையும் எதிர்கொள்வதற்காக பொலிஸாரையும் ஆயுதப்படையினரையும் இணைத்து ‘அவசரகால திட்டம்’ ஒன்றை தயாரிப்பதற்கு ஜனாதிபதி பாதுகாப்பு பிரதானிகளுக்கு அனுமதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் போதும், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் போதும் ஏற்படக்கூடிய எந்தவொரு அவசரநிலையையும் எதிர்கொள்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அவசர நிலை ஏற்படக்கூடும் என பாதுகாப்பு சபை கூட்டத்தின் போது பாதுகாப்பு பிரதானிகள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியமையே இதற்கான காரணமாகும்.

இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க, பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, படைத் தளபதிகளின் தலைமையில் எதிர்வரும் 18ஆம் திகதி விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

அதன் பின்னர் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதியின் தலைமையில் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் அவசர பாதுகாப்புச் சபைக் கூட்டமும் நடத்தப்பட உள்ளது.

இதேவேளை எந்தவொரு அவசர நிலையிலும் பொலிஸாருக்கு உதவியாக இராணுவத்தை நிலைநிறுத்துவது குறித்தும், அவசரநிலையில் இராணுவம் தனது அதிகாரங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் சட்டமா அதிபரிடம் ஆலோசனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இலங்கையின் சீர்திருத்த முயற்சிகளுக்கு சர்வதேச நாணய நிதியம் ஆதரவளிக்கும் அதே வேளையில், மூன்றாவது மீளாய்வுக்கான நேரம் எதிர்வரும் தேர்தல்களின் முடிவைப் பொறுத்தே அமையும் என கோசாக் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

தேர்தலுக்குப் பின், புதிய அரசாங்கம் அமைந்தவுடன் திட்ட விவாதங்கள் மீண்டும் தொடங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

 

 

 

 

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை