விபத்தில் சிக்கிய ஈரான் ஜனாதிபதி உயிரிழப்பு; சிதைவுகள் கண்டுபிடிப்பு

user 20-May-2024 உலகம் 9 Views

ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி (Ebrahim Raisi)  உயிரிழந்ததாக ஈரான் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

அதிபர் இப்ராகிம் ரைசியுடன் ஹெலிகாப்டரில் பயணித்த வெளியுறவுத்துறை மந்திரி உசைன் அமீர், கிழக்கு அசர்பைஜான் மாகாண கவர்னர் மாலிக் ரஹ்மதி உள்பட 9 பேரும் விபத்தில் உயிரிழந்தனர்.

ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி (Ebrahim Raisi)  உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தில் சிக்கிய ஈரான் ஜனாதிபதி (Ebrahim Raisi) பயணம் செய்த ஹெலிக்கொப்டரின் சிதைவுகள் காணப்படுவதாக துருக்கியின் ஆளில்லா விமானங்கள் தெரிவிக்கும் பகுதி தப்பிரிஸ் நகரிலிருந்து 100 கிலோமீற்றர் தொலைவில் காணப்படுவதாக அல்ஜசீராதெரிவித்துள்ளது.

தவில் என்ற கிராமத்தில் ஹெலிக்கொப்டரின் சிதைவுகள் காணப்படுவதாக மீட்பு பணியாளர்கள் கருதுகின்றனர். இதேவேளை 75 பேர் கொண்ட மீட்பு குழுவினரை அந்த பகுதிக்கு அனுப்பியுள்ளதாக ஈரானின் செம்பிறைச்சங்கம் தெரிவித்துள்ளது.

விபத்தில் சிக்கிய ஈரான் ஜனாதிபதியின் (Ebrahim Raisi)  ஹெலிக்கொப்டரின் சிதைவு என கருதப்படுவதிலிருந்து வெளிவரும் வெப்பத்தை தனது ஆளில்லா விமானங்கள் கண்டுபிடித்துள்ளன என துருக்கி தெரிவித்துள்ளது.

ஈரானில் மீட்பு பணிகளிற்கு துருக்கி பயன்படுத்தி வரும் அகின்சி ஆளில்லா விமானம் விபத்தில் சிக்கிய ஹெலிக்கொப்டரின் சிதைவிலிருந்து வெளியாகும் வெப்பத்தை கண்டுபிடித்துள்ளது என கருதுவதாக துருக்கி தெரிவித்துள்ளது.

இந்த விபரங்களை துருக்கி ஈரானுடன் பகிர்ந்துகொண்டுள்ளதுடன் துருக்கியின் ஆளில்லா விமானங்கள் , ஈரான் ஜனாதிபதியின் ஹெலிக்கொப்டர் காணப்படுவதாக தெரிவித்துள்ள பகுதிக்கு ஈரான் தனது மீட்பு பணியாளர்களை அனுப்பியுள்ளதாக கூறப்படுகின்றது.

ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஈரான் வெளிவிவகார அமைச்சரையும் ஏற்றிச் சென்ற உலங்குவானூர்தி வடமேற்கு ஈரானில் விழுந்து நொறுங்கிய இடத்தில் "இருவரும் உயிருடன் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை" என்று ஈரானிய அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது .

இந்த விபத்தில் உலங்குவானூர்தி முற்றிலும் எரிந்துள்ளதாக ஈரானிய அதிகாரியை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது இதேவேளை ஈரானிய தேடல் மற்றும் மீட்புக் குழுக்கள் உலங்குவானூர்தி சிதைவுகளை கண்டுபிடித்துள்ளனர்.

 

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை