அம்பாறை மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

user 20-May-2024 இலங்கை 6 Views

அம்பாறை- காரைதீவு பகுதியில் பல கோடி பெறுமதியானது என நம்பப்படும் 49 கிலோ நிறையுடைய நீல தூணா அல்லது உள்ளுரில் நீல ஹெலவள்ளா(ஹென்டா) சிக்கியது.

   ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் தூண்டிலில் சுமார் கோடிக்கணக்கான பெறுமதியானது என நம்பப்படும் நீல தூணா அல்லது உள்ளுரில் நீல ஹெலவள்ளா(ஹென்டா) என அழைக்கப்படும் பாரிய மீன் சிக்கியுள்ளது.

பெரிய கண் மற்றும் நீல நிற வர்ணங்களை கொண்டுள்ள குறித்த மீன் அம்பாறை மாவட்டம் காரைதீவு பகுதியில் மீனவரின் தூண்டிலில் பிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 49 கிலோ நிறையுடைய குறித்த மீனை விற்பதற்கான முயற்சியில் மீனவர்கள் இறங்கியுள்ளனர்.

கடும் போராட்டத்திற்கு மத்தியில் பிடிக்கப்பட்ட குறித்த மீன் இனங்கள் 7 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளதாகவும் யாவும் பெறுமதி மிக்கதாக உள்ளதாகவும் மீனவர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.

அதேவேளை பாரிய மீன்களை கொள்வனவு செய்கின்ற நிறுவனங்களே இவ்வாறான மீன்களை அதிக விலை கொடுத்து வாங்குவதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை