99% சதவீதம் உறுதி! விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போவது இந்த இயக்குனர் தான்

user 19-Mar-2024 பொழுதுபோக்கு 7 Views

விஜய்யின் கடைசி படமான 69வது படத்தை இயக்கப்போவது யார் என்பது குறித்து பல விதமான தகவல்கள் வெளியாகின்றன. நடிகர் விஜய் தற்போது Goat திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விஜய் அடுத்து அரசியலுக்கு செல்லும் காரணத்தினால் தளபதி 69 தான், தன்னுடைய கடைசி படம் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வந்த சமயத்தில் இருந்தே, யார் விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போகிறார் என பேச்சு எழுந்துவிட்டது.

ஹெச். வினோத், கார்த்திக் சுப்ராஜ், வெற்றிமாறன், ஆர்.ஜே. பாலாஜி, அட்லீ, தெலுங்கு இயக்குனர் திரிவிக்ரம் என பல இயக்குனர்களின் பெயர் இந்த லிஸ்டில் கூறப்பட்டது. ஆனால், தற்போது 99% சதவீதம் உறுதியாக இயக்குனர் ஹெச். வினோத் கூறிய கதையை விஜய் ஓகே செய்துவிட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

சமூக அரசியல் சார்ந்த கதைக்களத்தை விஜய்யிடம் கூறி ஹெச். வினோத் ஓகே செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான வேலைகள் தற்போது நடந்து வருவதாகவும், விரைவில் இதற்கான அறிவிப்பும் வெளியாகும் என பிரபல மூத்த பத்திரிகையாளர் ஒருவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். 

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை