ஸ்ரேயா கோஷல் குரல், ராஷ்மிகா நடனம் - ‘புஷ்பா 2’ இரண்டாவது சிங்கிள் எப்படி?

user 29-May-2024 பொழுதுபோக்கு

அல்லு அர்ஜூன் நடித்து வரும் ‘புஷ்பா 2’ படத்தின் இரண்டாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் பாடலில் புதுமையான நடன அமைப்பை படக்குழுவினர் முயற்சித்துள்ளனர். இது ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.

இரண்டாவது பாடல் எப்படி? - தெலுங்கில் ‘Sooseki’ என தொடங்கும் இப்பாடல், தமிழில் ‘சூடான’ என தொடங்குகிறது. பான் இந்தியா முறையில் மற்ற மொழிகளிலும் இப்பாடல் வெளியாகியுள்ளது. ஸ்ரேயா கோஷல் பாடியுள்ளார். தமிழில் பாடல் வரிகளை விவேகா எழுதியுள்ளார்.

தமிழில் பாடல் வரிகள் மெட்டுடன் பொருந்தாமல் தனித்து நிற்கின்றன. டப்பிங் பாடல் என்பது அச்சு அசலாக தெரிவதுடன், வரிகளும் அழுத்தமாக இல்லை. முன்னதாக வெளியான முதல் பாகத்தில் தமிழில் பாடல்கள் ஹிட் அடித்தன. மேலும் படக்குழு இந்தப் பாடலில் புதிய நடன அமைப்பை முயற்சித்துள்ளனர். வித்தியாசமான முயற்சி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் அல்லு அர்ஜூன் - ராஷ்மிகா கெமிஸ்ட்ரி கைகொடுத்துள்ளது.

புஷ்பா 2: அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில், சுனில் உள்ளிட்டோர் நடித்து கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம், ‘புஷ்பா: தி ரைஸ்’. சுகுமார் இயக்கிய இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார். இந்தப் படம் வெற்றி பெற்றதை அடுத்து, இதன் அடுத்த பாகம் இப்போது உருவாகியுள்ளது. ‘புஷ்பா தி ரூல்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆக.15-ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இப்படத்தின் முதல் பாடலான ‘பையரிங்’ பாடல் வரும் மே 1-ம் தேதி வெளியானது குறிப்பிடத்தக்கது.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை