முடிவுக்கு வருகிறதா இலங்கையின் உலகக்கிண்ண பயணம்..!

user 13-Jun-2024 பொழுதுபோக்கு 6 Views

விறுவிறுப்பான திருப்பங்களுடன் நடைபெற்று வரும் ஐசிசி 2024 T20 உலகக் கிண்ணத்தில் விளையாடி வரும் இலங்கையின் சுப்பர் 8 சுற்று கனவு பெரும்பாலும் முடிவுக்கு வந்துள்ளது.

அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்று வரும் ஒன்பதாவது ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன.

இத்தொடரில் இன்று அதிகாலை நடைபெறவிருந்த 23ஆவது லீக் போட்டியில் D குழுவில் இடம்பிடித்துள்ள இலங்கை மற்றும் நேபாளம்; அணிகள் பலப்பரீட்சை நடத்த இருந்தன.

 

நடப்பு T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி விளையாடிய இரண்டு லீக் போட்டிகளிலும் அதிர்ச்சி தோல்வியைத் தழுவிய நிலையில், நேபாளம் அணியும் விளையாடிய முதல் போட்டியில் தோல்வியை சந்தித்ததன் காரணமாக இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் இருந்தன.

 

மேலும் சுப்பர் 8 சுற்றுக்கு முன்னேற இவ்விரு அணிக்கும் இந்த போட்டியானது முக்கியமானதாக பார்க்கப்பட்டது. புளோரிடா, லௌடர்ஹில் சென்ட்ரல் ப்ரோவார்ட் ரீஜினல் பார்க் விளையாட்டரங்கில் நடைபெறவிருந்த இந்தப் போட்டியானால் மழை காரணமாக தடைப்பட்டது.

 

 

 

 

அதன்பின், முழு நாளும் கடும் மழை பெய்ததால் சுமார் 3 மணித்தியாலங்களின் பின்னர் ஆட்டம் கைவிடப்பட்டதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

 

 

இந்தப் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றால் மட்டுமே சுப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைக்க முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், போட்டி நடைபெற இருந்த புளோரிடாவில் தொடர்ந்து மழை பெய்த நிலையில் போட்டியானது கைவிடப்பட்டுள்ளது.

 

இதனால் இலங்கை அணியின் சுப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பு ஏறத்தாழ முடிவுக்கு வந்துள்ளதாக பார்க்கப்படுகிறது. இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் D குழுவில் தென்னாபிரிக்கா, நெதர்லாந்து, பங்களாதேஷ், நேபாளம் ஆகிய அணிகளுடன் இடம்பிடித்துள்ள இலங்கை அணியானது, தாம் விளையாடிய 3 போட்டிகளில் இரண்டில் தோல்வி, ஒரு போட்டி முடிவில்லை என புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இந்தக் குழுவில் தென்னாபிரிக்கா அணியானது விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று சுப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பை முதல் அணியாக உறுதிசெய்த நிலையில், பங்களாதேஷ் மற்றும் நெதர்லாந்து அணிகள் ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை