ஈரானின் இராணுவப்படையை பயங்கரவாத குழுவாக அடையாளப்படுத்தும் கனடா !

user 20-Jun-2024 உலகம் 3 Views

ஈரானின் (Iran) மிகவும் சக்திவாய்ந்த இராணுவப் பிரிவான ஈரானிய புரட்சி இராணுவத்தை (IRGC) பயங்கரவாத குழுவாக அறிவிக்க கனடா (Canada) தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கனேடிய எதிர்க்கட்சி மற்றும் ஈரானிய புலம்பெயர்ந்தோரால் தொடர்ந்து வழங்கப்பட்டு வரும் அழுத்தம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மேலும், கனேடிய பிரஜைகள் மற்றும் இராஜதந்திரிகளை ஈரானில் இருந்து விலக்கிக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

 

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை