நாய்க்குட்டியால் வங்கி கணக்கில் பெரும் தொகையை இழந்த நபர் !

user 13-Aug-2024 இலங்கை 6 Views

காலியில் 45000 ரூபாவுக்கு நாய்க்குட்டியை கொள்வனவு செய்வதாக தெரிவித்த நபரின் கணக்கில் இருந்து 172,280 ரூபாவை மோசடியான முறையில் பெற்றுக்கொண்ட  சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

நபர் ஒருவர்  தம்மிடம் தலா 45000 ரூபாவுக்கு நாய்க்குட்டிகள் விற்பனைக்கு இருப்பதாக   இணையத்தில் விளம்பரம் செய்துள்ளார்.

அந்த விளம்பரத்தை அவதானித்த   காலியில் உள்ள ஒருவர் நாய்க்குட்டியை பெற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்து நாய்க்குட்டிகளின் உரிமையாளருக்கு  அழைப்பை எடுத்துள்ளார்.  

இதன்போது 20000 ரூபாய் முன்பணம் தேவை என கூறி  வங்கி கணக்கு எண் வழங்கியுள்ளார். அதற்கமைய, நாய் வாங்குபவர் இருபதாயிரம் ரூபாவை வைப்பிலிட்டுள்ளார்.

பணத்தை வைப்பு செய்த பிறகு, நாயின் உரிமையாளர் மீண்டும் அழைத்து, OTP உடன் உங்கள் கையடக்க தொலைபேசிக்கு குறுஞ்செய்தி வரும் என கூறினார்.

இதனையடுத்து OTP அந்த எண்ணைக் கொடுத்த மூன்று நிமிடங்களில், நாய் உரிமையாளர், கொள்வனவாளரின் கணக்கில் இருந்து மூன்று முறை 172,280 ரூபா பணத்தை எடுத்துள்ளார்.

பணம் எடுக்கப்பட்டதை அறிந்த அவர், இந்த மோசடி குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ள நிலையில் சந்தேகநரை கைது செய்ய  விசாரணை ஆரம்பிக்கபப்ட்டுள்ளது.

இந்நிலையில்  இவ்வாறான ஒன்லைன் விளம்பரங்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என பொது மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன்,  வங்கி கணக்குகள்  தொடர்பில்  உங்கள் மொபைலுக்கு  வரும்  OTP இலக்கங்களை யாருக்கும் வழங்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.  

 

 

 

 

 

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை