தற்போதைய பொருளாதார திட்டத்தை இடைநிறுத்துவதற்கு எதிராக மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை

user 28-Aug-2024 இலங்கை 26 Views

தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் பொருளாதார செயற்திட்டத்தை இடைநிறுத்துவதானது சுமார் இருவருடங்களுக்கு முன்னர் நாடு முகங்கொடுத்த பொருளாதார, சமூக நெருக்கடி மீண்டும் தோன்றுவதற்கே வழிகோலும் என  மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற இலங்கை தொழில்வல்லுனர் அமைப்பின் 37 ஆவது வருடாந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டின் பொருளாதார மீட்சியை இலக்காகக்கொண்டு தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் மறுசீரமைப்பு செயற்முறையானது நடுத்தர - நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாதது எனவும் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு குறுங்கால மறுசீரமைப்புக்கள் கடினமானவையாக இருப்பினும், நீண்டகாலமாக நிலுவையில் இருந்த இந்த மறுசீரமைப்புக்களை நடைமுறைப்படுத்துவதற்கு சகல தரப்பினரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவது நிலைபேறான வளர்ச்சியை நோக்கிய பாதையில் நாட்டை நகர்த்திச்செல்வதற்கு அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் நாட்டின் நிகழ்கால மற்றும் எதிர்கால சுபீட்சத்துக்கு நிதி மற்றும் கடன் ஸ்திரத்தன்யை மீள அடைந்துகொள்ளவேண்டும் எனவும் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். 

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை