வரலாற்று சிறப்பு மிக்க யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய கொடியேற்றம்..!

user 02-Sep-2024 இலங்கை 22 Views

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய குரோதி வருட கொடியேற்ற பெருந்திருவிழா ஆலய பிரதம சிவாச்சாரியார் கண்ணன் குருக்கள் தலைமையில்  காலை 9:15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதில் வடமராட்சியின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இதேவேளை ஆறாம் திருவிழா வரை காலை மாலை சிறப்பு அபிசேக பூசைகள் இடம் பெற்று 7ம் திருவிழாவான 8ஆம் ( 08.09.2024) அன்று வல்லிபுரத்து ஆழ்வார் வெளிவீதி வரவுள்ளார்.

தொடர்ந்து 8ம் திருவிழாவான 09ஆம் திகதி குருக்கட்டு பிள்ளையார் திருவிழாவும் தொடர்ந்து இடம்பெறவுள்ளதோடு  15ம் திருவிழாவான 16ஆம் திகதி அன்று தேர்த்திருவிழாவும், 16.ம் திருவிழாவான சமுத்திர திருவிழாவும் மறுநாள் 17ம் திருவிழாவாக கேணித்தீர்த்தமும் இடம் பெறவுள்ளன.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை