ஏப்ரல் மாதத்திற்குள் வரிக் குறைப்பு

user 02-Sep-2024 இலங்கை 21 Views

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் வரி குறைப்பு நடைமுறைப்படுத்தப்படும் என நாங்கள் நம்புகின்றோம் என்று நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்  போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் தற்போது சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி வருகின்றோம். அதேபோன்று, தனியார் துறை வரி செலுத்துவோருக்கு சலுகைகளை வழங்குவது குறித்தும் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார்.

அது தொடர்பாக, செப்டம்பர் 2023 முதல் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டன. அதன்படி தற்போது ஆண்டுக்கு 12 இலட்சம் என்ற வரி விலக்கு வரம்பை தக்க வைத்துக் கொள்ளவும், 5 இலட்சத்தை 720,000 ஆக உயர்த்தவும் IMF உடன் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.

இது தொடர்பான இறுதி இணக்கப்பாடுகள் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டதன் பின்னர் 2025 ஏப்ரல் மாதத்திற்குள் வரி குறைப்பு நடைமுறைப்படுத்தப்படும் என நம்புகிறோம் என குறிப்பிட்டுள்ளார். 

 

 

 

 

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை