தேர்தலின் பின்னர் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் வெளியான அறிவிப்பு !

user 13-Sep-2024 இலங்கை 7 Views

எதிர்வரும் 21-ஆம் திகதி நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தும் திட்டம் இல்லை என பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணத்திலக்க தெரிவித்துள்ளார்.

ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு எனவும் எனினும் இதுவரையில் அவ்வாறான ஆயத்தங்கள் எதுவும் செய்யப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தும் அதிகாரம் ஜனாதிபதியிடம் காணப்படுவதாகவும் ஜனாதிபதி விரும்பினால் ஊரடங்கு சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும் எனவும் பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் தேர்தல்களின் பின்னர் சில சந்தர்ப்பங்களில் இவ்வாறு ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் மொத்தமாக 38 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

17.1 மில்லியன் மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுக்கொண்டுள்ளனர். சுமார் ஒரு மில்லியன் பேர் புதிதாக இம்முறை வாக்களிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை