தீர்வின்றி காணப்படும் பாகிஸ்தான் !

user 18-Sep-2024 இலங்கை 29 Views

பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக சர்ச்சையானது இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது.

இது தீவு நாட்டிற்கான இஸ்லாமபாத்தின் ஏற்றுமதிக்கு தீங்கு விளைவிக்கும் என நம்பகத் தகுந்த ஆதாரங்களை மேற்கொள்காட்டி பாகிஸ்தானிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பாகிஸ்த்னின் வர்த்தக அமைச்சு திங்களன்று, வர்த்தகத்திற்கான செனட் நிலைக்குழுவிற்கு இலங்கை அதிகாரிகள் ஒத்துழைக்கவில்லை என்று அறிவித்தது, இந்த பிரச்சினை இப்போது அரசியல் மட்டத்தில் தீர்க்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது.

பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சியின் செனட்டர் அனுஷா ரஹ்மான் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.பாகிஸ்தான் – இலங்கை இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ( FTA) 2005 இல் கையொப்பமிடப்பட்டது, இது வணிக நிறுவனங்களுக்கான பிரச்சினைகளை தீர்க்கும் பொறிமுறையை உள்ளடக்கிய இரு நாடுகளுக்கு இடையிலான ஒரே வர்த்தக ஒப்பந்தமாகும்.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை