பலஸ்தீனத்துக்கு எதிரான போரில் பட்டினியை ஆயுதமாக்கும் இஸ்ரேல்! -ஐ.நா குற்றச்சாட்டு

user 21-Mar-2024 உலகம் 3 Views

பலஸ்தீனம் மீதான போரில், பட்டினியை ஆயுதமாக இஸ்ரேல் இராணுவம் பயன்படுத்துவதாக ஐ.நா  குற்றம்சாட்டியுள்ளது.

 

பலஸ்தீனம் மீது இஸ்ரேல் இராணுவம்  நடத்திவரும் தாக்குதலானது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் இதுவரை  சுமார் 30,000க்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள்  இப்போரினால் கொல்லப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு  சர்வதேச நாடுகளால் அனுப்பப்படும் உணவு, மருந்து பொருட்களையும் அவர்களுக்கு கிடைக்க விடாமல் இஸ்ரேல் இராணுவம் தடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து விசாரித்து வந்த சர்வதேச நீதிமன்றம், காசாவுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கிட இஸ்ரேல் குறுக்கே நிற்கக்கூடாது என உத்தரவிட்டிருந்த போதும் இஸ்ரேல் அதனை கடைபிடிப்பதில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அம்மக்கள் பட்டினியால் உயிரிழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்போரில் பட்டினியை இஸ்ரேல் அரசு ஆயுதமாகப்  பயன்படுத்துவதாக ஐநா குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை