உலக முதலீட்டாளர்களுடன் இலங்கை விசேட பேச்சுவார்த்தை

user 21-Mar-2024 பொருளாதார

உலகளாவிய கடன் பத்திரங்களை மறுசீரமைத்தல் தொடர்பில் உலக முதலீட்டாளர்களுடன்  இலங்கை அதிகாரிகள் விசேட பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தைகள் அடுத்த வாரம் நடாத்தப்படவுள்ளன.

2022 முதல் கடனை திருப்பிச் செலுத்தாத வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்புக்கான இலங்கை அரசாங்கத்தின் முன்மொழிவைக் கருத்திற்கொண்டு, வழிகாட்டுதல் குழு மற்றும் பத்திரதாரர்களின் குழு இணைந்து இந்த பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதாக ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

குறிப்பாக இலங்கையில் இந்த வருட இறுதியில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், விரைவாக ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதே இலக்காகும் என கடன் பத்திரதாரர்களின் குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 

 

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை