கனிமொழி, ஆ.ராசாவுக்கு புதிய சிக்கல்

user 22-Mar-2024 இந்தியா 8 Views

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் கனிமொழி, ஆ.ராசா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சிபிஐ தொடந்த மேல்முறையீட்டு மனுவை 6 ஆண்டுகள் கழித்து டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.

கடந்த 2007ம் ஆண்டு தொலைதொடர்பு துறை அமைச்சராக இருந்தவர் ஆ.ராசா. இவரது பதவி காலத்தில் 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஏலம் நடந்தது

அப்போது, முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்ட லைசன்ஸ்களில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதாவது சுமார் ரூ.1,26,000 கோடி அளவிற்கு முறைகேடு நடந்ததாக கூறப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இது தொடர்பான வழக்கில் ஆ.ராசா, கனிமொழி மற்றும் அதிகாரிகள் மீது டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பின்னர், 10 ஆண்டுகள் நடைபெற்ற வழக்கில் 2017 -ம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது.

அதோடு, சிபிஐ தரப்பில் ஆவணங்கள் எதையும் ஒப்படைக்கவில்லை என்று நீதிபதி ஓ.பி.சைனி தனது தீர்ப்பில் கூறியறிந்தார்.

இதனை தொடர்ந்து, கடந்த 2018 -ம் ஆண்டு ஆ.ராசா, கனிமொழி ஆகியோரின் விடுதலையை எதிர்த்து சிபிஐ தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

 

இந்நிலையில், சிபிஐ தரப்பின் மேல்முறையீட்டு விசாரணையை ஏற்றுக்கொள்வதாக டெல்லி உயர் நீதிமன்றம் தற்போது அறிவித்துள்ளது. தேர்தல் நேரம் என்பதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

 

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை