கூட்டணி ஆட்சியில் தங்கியுள்ள பாஜக – நிபந்தனை

user 05-Jun-2024 இந்தியா

இந்திய மக்களை தோ்தலின் முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான கூட்டணி மூன்றாவது முறையாகவும் ஆட்சியமைக்கவுள்ளது.

 

எனினும், இந்த தேர்தலில் பா.ஜ.க விற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பா.ஜ.க ஆட்சியமைப்பதில் கூட்டணிகளின் ஆதரவையே தங்கியிருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், பா.ஜ.க விற்கு கூட்டணி கட்சிகள் சில நிபந்தனைகளை விதித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, மத்தியில் 3 ஆவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில்,

ஆந்திர மாநிலத்தின் சந்திரபாபு நாயுடுவின் சரத்பவார் தெலுங்குதேசம் மற்றும் பீகார் மாநிலத்தின் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கூட்டணி கட்சிகள் நிபந்தனைகள் விதிப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறிப்பாக இந்த இரு மாநிலங்களும் சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வரும் நிலையில், இந்த கோரிக்கையை, தற்போது ஆட்சிக்கு ஆதரவு தெரிவிக்க நிபந்தனைகளாக விதித்து வருவதாக கூறப்படுகிறது.

தெலுங்கானாவில் 16 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 12 தொகுதிகளிலும் வென்றுள்ளது.

இதனை தொடர்ந்தே இவர்களின் ஆதரவுடன் மத்தியில் 3 ஆவது முறையாக பாஜக ஆட்சி அமைக்க முனைப்பு காட்டி வருகிறது.

 

இந்தியாவின் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், நேற்று காலை 8 மணிக்கு வாக்கெண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்நிலையில் இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில், பா.ஜ.க கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் கைப்பற்றியுள்ளது.

அதன்படி, பாரதிய ஜனதா கட்சி 240 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி 99 தொகுதிகளிலும் சமாஜ்வாதி கட்சி 37 தொகுதிகளிலும் அகில இந்திய திரிணாமூல் காங்கிரஸ் 29 தொகுதிகளிலும் திராவிட முன்னேற்றக் கழகம் 22 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

தேசிய ஜனநாயக கூட்டணி 286 ஆசனங்களையும் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 202 ஆசனங்களையும் ஏனைய கட்சிகள் 55 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளதாக ‘த ஹிந்து’ செய்தி வௌியிட்டுள்ளது.

அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மகாஷ்டிர மாநிலத்தில் 1 தொகுதியில் மாத்திரம் இதுவரை தேர்தல்கள் வெளியாகவில்லை என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.

 

எனினும், பா.ஜ.கவிற்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தனது தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) கட்சிகளுடன் கைகோத்து, மத்தியில் கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலையே பாஜகவுக்கு உருவாகியுள்ளது.

இந்நிலையில், தனது வெற்றி குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் மோடி,

கட்சி ஆதரவாளர்களை சந்தித்து, தொடர்ந்து மூன்றாவது தடவையாகவும் ஆட்சியமைக்கும் நம்பிக்கையுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் 3 ஆவது ஆட்சியில் மிகப்பெரிய முடிவுகள் எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்துள்ள அவர், உலகின் 3ஆவது பெரிய பொருளாதார நாடாக இந்தியாவை மாற்ற அதிதீவிர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

 

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை