இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று..!

user 25-Mar-2024 இலங்கை 4 Views

இந்த வருடத்தின் முதல் சந்திர கிரகணத்தை உலக மக்கள் இன்று காணும் வாய்ப்பு கிடைக்கவுள்ளது.

இன்று காலை 10.23 மணி முதல் பிற்பகல் 03.02 மணி வரை சந்திரகிரகணம் தெரியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞான பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பிற்பகல் சந்திர கிரகணம் ஏற்படுவதால் இலங்கையர்களால் அதனை காண முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா, அயர்லாந்து, இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து, பெல்ஜியம், தெற்கு நோர்வே மற்றும் சுவிட்சர்லாந்தின் சில பகுதிகளில் காண முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்

இந்தநிலையில், இன்று பங்குனி உத்திரமும் கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திரத்தில் சந்திர கிரகணம் 100 ஆண்டுகளுக்கு பின் வருகிறது.

அதுமட்டுமின்றி இன்று ஹோலி பண்டிகையும் கொண்டாடப்படுகிறது. இதனால் இன்றைய சந்திர கிரகணம் கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை