Sunday, September 15, 2024
நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா ரதல்ல குறுக்கு வீதிக்கு அருகில் தலவாக்கலை - நுவரெலியா பிரதான வீதியில் கஞ்சா போதைப்பொருளுடன் பாரவூர்தி சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரால் நேற்று (18.03.2024) மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போதே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு மீட்கப்பட்ட கஞ்சா போதைப்பொருள் 180 மில்லிகிராம் நிறையுடையது எனவும் கைது செய்யப்பட்ட லொறி சாரதி பதுளை - ஹாலிஎல பகுதியை சேர்ந்த 27 வயது உடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணையின் பின்னர் சந்தேகநபர் இன்று நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.