மீண்டும் இந்தியாவுடனான வா்த்தக உறவிற்கு விருப்பம் தெரிவித்த பாகிஸ்தான் !

user 25-Mar-2024 உலகம் 5 Views

இந்தியாவுடன் கடந்த 2019 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதல் தடைப்பட்டுள்ள வா்த்தக உறவை மீட்டெடுப்பதற்கு பாகிஸ்தான் தீவிரமாக பரிசீலித்து வருகிறது’ என அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் முகமது ஐசக் தாா் கூறினாா்.

கடன் நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானில், அந்நாட்டு வா்த்தகா்களும் பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனா்.

இந்த நிலையில், இந்தியாவுடனான வா்த்தக உறவை மீண்டும் தொடருவதற்கு பாகிஸ்தான் விருப்பம் தெரிவித்துள்ளது.

லண்டனில் நடைபெற்ற அணுசக்தி மாநாட்டில் பங்கேற்ற பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சா் முகமது ஐசக் தாா், இது குறித்து தெரிவிக்கையில்,

“பாகிஸ்தான் தொழிலதிபா்கள் இந்தியாவுடன் வா்த்தகத்தை மீண்டும் தொடர வேண்டும் என்று விரும்புகின்றனா். அதன் காரணமாக இந்தியாவுடனான வா்த்தக உறவை மீட்டெடுப்பது குறித்து பாகிஸ்தான் தீவிரமாக பரிசீலித்து வருகிறது’ என குறிப்பிட்டார்.

2019 பெப்ரவரியில் புல்வாமா பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து, பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் சுங்க வரியை 200 சதவீதம் அளவுக்கு இந்தியா உயா்த்தியது. இதன் காரணமாக இரு நாடுகளிடையேயான வா்த்தக உறவு பாதிக்கப்பட்டது.

அதே ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்ததை அடுத்து, இந்தியாவுடனான வா்த்தக உறவை பாகிஸ்தான் முழுமையாக நிறுத்திக்கொண்டது.

வா்த்தக உறவு பாதிக்கப்பட்டபோதும், இரு நாடுகளிடையேயான 2003 போா் நிறுத்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், அண்மையில் அந்நாட்டு பிரதமராக இரண்டாவது முறையாக பதவியேற்ற ஷெபாஸ் ஷெரீஃபுக்கு பிரதமா் மோடி வாழ்த்து தெரிவித்தாா்.

அதற்கு ஷெபாஸ் ஷெரீஃப் நன்றி தெரிவித்தாா். இது இரு நாடுகளிடையேயான உறவு மீண்டும் மேம்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது.

இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளை ஆதரிப்பதை பாகிஸ்தான் முழுமையாகக் கைவிட்டாமல் மட்டுமே அந்நாட்டுடன் பேச்சுவாா்த்தை நடத்துவது என்பதில் இந்தியா உறுதியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை