பதவி விலகவுள்ளார் சிங்கப்பூர் பிரதமர் லீ சியென்

user 16-Apr-2024 உலகம் 3 Views

சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் அடுத்த மாதம் (மே) 15ஆம் திகதியுடன் பதவி விலக போவதாக அறிவித்துள்ளார்.

நாட்டின் 3வது பிரதமரான இவர் கடந்த 2004 முதல் மக்கள் செயல் கட்சியின் பொதுச்செயலாளராகவும் இருந்து வருகிறார்.

சிங்கப்பூரில் பிரதமர் லீ சியென் லூங் (வயது 72) தலைமையிலான மக்கள் செயல் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.

சமீபகாலமாக இந்த கட்சியின் மந்திரி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

இதன் காரணமாக 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகினர். இந்தநிலையில் பிரதமர் லீ சியென்னும் அடுத்த மாதம் (மே) 15ஆம் திகதி பதவி விலக போவதாக அறிவித்துள்ளார்.

மேலும் தான் பதவி விலகும் அதேநாளில் லாரன்ஸ் வோங் பிரதமராக பதவியேற்பார் எனவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூகவலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “லாரன்ஸ் மற்றும் அவரது குழுவினருக்கு உங்களின் முழு ஆதரவையும், சிங்கப்பூருக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க அவர்களுடன் இணைந்து பணியாற்றுமாறு அனைத்து சிங்கப்பூரர்களையும் கேட்டுக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

 

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை