எனது தாயார் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்” – நெகிழ்ச்சியுடன் பேசிய இயக்குநர் ஜேசன் சஞ்சய்

user 10-Aug-2026 பொழுதுபோக்கு 52 Views

நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யின் மகனும் இயக்குநருமான ஜேசன் சஞ்சய், தனது தாயாரின் யாழ்ப்பாணப் பூர்வீகம் மற்றும் இலங்கையுடனான தனது குடும்பத் தொடர்பு குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றில் தனது குடும்பப் பின்னணி குறித்து பேசிய ஜேசன் சஞ்சய், தனது தாயார் இலங்கையின் வடக்குப் பகுதியான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவித்துள்ளார்.

“எனது அம்மா யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். அதாவது, இலங்கையின் வடக்குப் பகுதியைச் சேர்ந்தவர். அவர் அங்கேயே பிறந்து வளர்ந்தார். பின்னர், அவரது குடும்பத்தினர் வெளிநாட்டில் குடியேறினர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்குச் செல்லும் சந்தர்ப்பங்களில், தனது தாத்தாவுக்குச் சொந்தமான சொத்துகளில் ஒன்று தனது குடும்பத்தின் கடந்த காலத்தையும் பூர்வீகத்தையும் நினைவூட்டும் முக்கியமான இடமாக இருப்பதாகவும் ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார்.

மேலும், தான் இயக்கவிருந்த ‘சிக்மா’ (Sigma) திரைப்படத்திற்கான படப்பிடிப்புத் தளமாக இலங்கையையும் பரிசீலித்ததாக அவர் கூறியுள்ளார். இதற்காக படக்குழுவினர் இலங்கைக்கு சென்று சில படப்பிடிப்பு இடங்களையும் பார்வையிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும், பல்வேறு காரணங்களால் அந்தத் திட்டம் பின்னர் கைகூடவில்லை. இருப்பினும், எதிர்காலத்தில் இலங்கையில் திரைப்படப் படப்பிடிப்பை மேற்கொண்டு, அந்நாட்டின் இயற்கை அழகையும் சிறப்பையும் திரையில் வெளிப்படுத்த வேண்டும் என்ற விருப்பம் தனக்கு இருப்பதாக ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யின் மனைவி சங்கீதா, யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட லண்டன் வாழ் புலம்பெயர் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை