சீனாவை பின்தள்ளிய உலக நாடுகள் இந்தியாவை நோக்கி வருகிறது

user 29-May-2024 இந்தியா

சீனாவை பின் தள்ளிய சர்வதேச நாடுகள் தற்போது இந்தியாவை நோக்கிய வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.

 

கொரோனா தொற்றுக்கு பிறகு சீனாவை நம்பியிருக்கும் உலக நாடுகள், ஆபத்தை உணர்ந்திருப்பதாகவும், இதனால் இந்தியாவுக்கான வாய்ப்புக்கள் சர்வதேச அளவில் அதிகரித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவில் பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்டோர்களுடனான கலந்துரையாடலின்போதே, ஜெய்சங்கர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, கொரோனா தொற்றையடுத்து சீனா குறித்து உலக நாடுகள் மிகவும் கவனமாக உள்ளதாகவும், மிகச் சாதாரண பொருட்கள் கூட சீனாவிலிருந்து இறக்குமதி செய்த உலக நாடுகள், கொரோனா தொற்று காலத்தில் பொருட்களை பெற முடியாமல் தவித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனால், இந்தியாவை நோக்கி அந்நாடுகள் நகர்ந்ததாக ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

மேலும், டிஜிட்டல் தன்மை, வணிகத்தில் நிலையான தன்மை, தலைமைத்துவம், நல்ல நிர்வாகம் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றின் மூலம், உலக வணிகத்தை, இந்தியா நோக்கி வர மேலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இனி உலக நாடுகள் இந்தியாவை நோக்கி வரும் என தெரிவித்த இந்திய வெளியுறுவுத்துறை அமைசர், வளர்ச்சி என்பது இனி அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என தாம் விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை