அத்வானி மருத்துவமனையில் அனுமதி!

user 27-Jun-2024 உலகம் 10 Views

பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமரும், பா.ஜனதா மூத்த தலைவருமான எல்.கே. அத்வானிக்கு நேற்று இரவு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனைத்தொடர்ந்து அவர் உடனடியாக சிகிச்சைக்காக, அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) அனுமதிக்கப்பட்டுள்ளதாக, மருத்துவமனை அறிக்கை ஒன்றில் உறுதி செய்யப்பட்டுள்ளது

96 வயதான பா.ஜனதா மூத்த தலைவரான எல்.கே.அத்வானிக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுநீரக துறையை சேர்ந்த மருத்துவர்கள்  சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், மருத்துவமனையில் முதியோர் பிரிவு சிறப்பு மருத்துவர்களின் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  

 

 

 

 

 

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை