மலையக மக்களுடன் கைகோர்க்கும் ஐ.நா

user 28-Jun-2024 இலங்கை 6 Views

 

ஜக்கிய நாடுகள்  சபையின் கீழ் செயற்படுகின்ற நிறுவனங்கள், மலையக மக்களுக்கான அனைத்து ஒத்துழைப்புகளை வழங்கும் என இலங்கைக்கான ஐ.நா. வதிவிட பிரதிநிதி உறுதியளித்துள்ளார்” என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஐ.நா. வதிவிட பிரதிநிதி மார்க் அந்திரேவிற்கும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று கொழும்பில் நடைபெற்றது.

இந்த சந்திப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். உதயகுமாரும் கலந்து கொண்டிருந்தார்.

மலையக மக்களுக்கு  வதி விட காணி உரிமை, வாழ்வாதார காணி உரிமை உள்ளிட்ட உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதுடன், அவர்களும் இந்த நாட்டின் முழுமையான பிரஜைகளாக்கும் கொள்கையைத் தமிழ் முற்போக்கு கூட்டணி முன்னெடுத்து வருவதாக மனோ கணேசன் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, மக்கள் ஆணை கொண்ட அரசியல் பிரநிதிகளுடன் இணைந்து பணியாற்ற கூடிய மலையக சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் தொடர்பாக சர்வதேச சமூகத்துக்கு அறிவிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஐ.நா நிறுவனங்களான, உணவு விவசாய நிறுவனம், யுனிசெப், உலக உணவு நிறுவனம் ஆகியவை ஊடாக தொழில்நுட்ப, அபிவிருத்தி, ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் என இதன்போது மனோ கணேசன் இலங்கை ஐ.நா. வதிவிட பிரதிநிதியிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை