மறைந்த தலைவர் இரா.சம்பந்தனின் பூதவுடலுக்கு திருகோணமலையில் அஞ்சலி!

user 05-Jul-2024 இலங்கை 7 Views

யாழ்ப்பாணத்தில் அஞ்சலிக்கா வைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடல், தற்போது திருகோணமலைக்கு கொண்டுச் செல்லப்பட்டு மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

யாழ். தந்தை செல்வா கலையரங்கில் சம்பந்தனின் பூதவுடலுக்கு நேற்று பலரும் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

 

இந்நிலையில், இன்று காலை விமானம் மூலம் திருகோணமலை சீனக்குடா நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட அன்னாரின் பூதவுடல், விமானப்படையினருடைய மரியாதையுடன் வாகனப்பேரணியாக அன்னாரின் இல்லத்திற்கு கொண்டுச்செல்லப்பட்டது.

இதில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை