Monday, September 16, 2024
‘தி கோட்’ படத்தின் படப்பிடிப்புக்காக கேரளா சென்றுள்ள நடிகர் விஜய், அங்கு குழுமியிருந்த ரசிகர்களிடையே மலையாளத்தில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது.
கடைசியாக விஜய் கடந்த 2011-ம் ஆண்டு இயக்குநர் சித்திக் இயக்கத்தில் வெளியான ‘காவலன்’ படத்தின் படப்பிடிப்புக்காக 2010-ம் ஆண்டு நடிகர் விஜய் கேரளா சென்றார். அதன் பிறகு அவர் எந்த படத்தின் படப் பிடிப்புக்காகவும் கேரளா செல்லவில்லை. தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
14 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் விஜய் கேரளா சென்றடைந்தார். அங்கு அவர் சென்ற முதல் நாளே ரசிகர்கள் கூட்டம் திரண்டு அவருக்கு உற்சாக வரவேற்பளித்தது.