ஜனாதிபதி வேட்பாளர்களின் பாரிய மோசடி அம்பல் !

user 29-Aug-2024 இலங்கை 26 Views

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 15 பேர் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தேர்தல் பிரச்சிார நடவடிக்கைகளுக்கு செல்லாமல் பிரச்சார நடவடிக்கை மேற்கொள்ளவதாக கூறி பல்வேறு நபர்களிடம் பணம் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் கிடைத்துள்ள முறைப்பாடுகளுக்கு அமைய ஆராய்ந்து வருவதாக தேர்தல் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சுமார் 30 ஜனாதிபதி வேட்பாளர்கள் இன்னும் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரத்தை ஆரம்பிக்கவில்லை எனவும் அவர்களில் சிலர் கட்சி அலுவலகத்தை கூட திறக்கவில்லை எனவும் அந்த அதிகாரி கூறினார்.

தேசிய தொலைக்காட்சி மற்றும் தேசிய வானொலியில் தமது கொள்கைகளை முன்வைப்பதற்கு ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு வழங்கப்படும் இலவச ஒளிபரப்பு நேரத்தை வழங்காதது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் 38 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். ஒரு வேட்பாளருக்காக தேர்தல் ஆணையம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் செலவழிக்கும் என தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன.

 

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை