உலகையே ஆழப்போகும் இந்திய வீராங்கனை !

user 07-Aug-2024 இந்தியா 11 Views

ஒலிம்பிக் போட்டிகளில் பல சுவாரஷ்யங்கள் , பல வரலாற்று வெற்றிகள் என்பன பதிவாகி கொண்டிருக்கும் நிலையில், மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடைப் பிரிவுக்கான அரையிறுதி போட்டி நேற்று நடைபெற்றது.

இதில், கியூபா வீராங்கனையை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்திய வீராங்கனை வினேஷ் போகத் வெற்றிபெற்றார்.

இதன்மூலம் ஒலிம்பிக் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடைப் பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை வினேஷ் போகத் பெற்றுள்ளார்.

வரலாற்றுச் சாதனை படைத்த வினேஷ் போகத்திற்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

குறிப்பாக மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த பாஜக முன்னாள் எம்.பி பிரிஜ் பூஷண் சிங் வீராங்கனைகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்துகொண்டதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய வீராங்கனைகள் பலர் டெல்லியில் பல வாரங்களாகப் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டங்களில் முன்னிலையில் நின்றவர் வினேஷ் போகத். இதனால் அவர் பெற்றுள்ள இந்த வெற்றி அவரை அவமதித்தவர்களுக்கு எதிரான அடி என்று சக விளையாட்டு வீரர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஒரே நாளில் உலகின் தலைசிறந்த மூன்று மல்யுத்த வீராங்கனைகளை வினேஷ் போகத் வீழ்த்தியுள்ளார்.

வினேஷ் மற்றும் அவரது சக வீராங்கனைகளின் போராட்டத்தை விமர்சித்தவர்கள், அவர்களின் எண்ணம் மற்றும் திறன் குறித்து கேள்வி எழுப்பியவர்கள் ஆகிய அனைவருக்கும் தற்போது பதில் கிடைத்துள்ளது.

இரத்தக் கண்ணீர் வடிக்கச் செய்த ஒட்டுமொத்த அதிகார அமைப்பும் இன்று இந்தியாவின் வீர மகளுக்கு முன்னால் வீழ்ந்துவிட்டது. இதுதான் சாம்பியன்களின் அடையாளம், அவர்கள் களத்தில் இருந்துதான் பதிலளிப்பார்கள்.

 

வாழ்த்துகள் வினேஷ். பாரிஸ் நகரில் உங்கள் வெற்றியின் எதிரொலி டெல்லி வரை தெளிவாகக் கேட்கிறது” என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

முன்னதாக சக மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, சொந்த நாடே உதறித்தள்ளியது இப்போது அவர் உலகையே ஆளப்போகிறார் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை