ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கைப் பிரகடனம் வெளியிடப்பட்டது

user 29-Aug-2024 இலங்கை 23 Views

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கைப் பிரகடனம் இன்று காலை கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் வெளியிடப்பட்டது.

இயலும் ஸ்ரீலங்கா கூட்டணியின் நாட்டிற்கான கொள்கை பிரகடனமும் இன்போது முன்மொழியப்பட்டிருந்தது.

 

ஜனாதிபதி வேட்பாளா் ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கைப் பிரகடன வெளியீட்டு நிகழ்வு ஆரம்பம்!

ஜனாதிபதி வேட்பாளா் ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கைப் பிரகடனம் வெளியிடும் நிகழ்வு தற்போது ஆரம்பமாகியுள்ளது.

இன்று காலை கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் சற்று முன்னர் இந்த நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது.

இயலும் ஸ்ரீலங்கா கூட்டணியின் நாட்டிற்கான கொள்கை பிரகடனமும் இன்போது முன்மொழியப்படவுள்ளது.

இயலும் ஸ்ரீலங்கா என்ற தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்தக் கொள்கை அறிக்கையில் நாட்டை திவாலான நிலையில் இருந்து மீட்பதற்கான பொருளாதார மறுசீரமமைப்பு தொடர்பான அடிப்படை நடைமுறைகளும் இடம்பெற்றுள்ளன.

நாட்டின் அனைத்து மக்களுக்கும் நல்லதொரு நாட்டைக் கட்டியெழுப்புவது இயலும் ஸ்ரீலங்காவின் கொள்கைப் பிரகடனத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.

வரலாற்றில் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்த நாடு படிப்படியாக மீட்சியடைந்ததன் பின்னர்
மேலும் ஒரு அடியை எடுத்து வைப்பது தொடர்பாகவும் ஜனாதிபதி வேட்பாளா் ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கைப் பிரகடனத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை