தேர்தல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த கமலா ஹரிஸ் !

user 29-Aug-2024 உலகம் 27 Views

அமெரிக்க (America) ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் துணை ஜனாதிபதியான கமலா ஹரிஸ் (Kamala Harris), தேர்தல் பிரசாரத்திற்காக கடந்த ஒரு மாதத்தில் 4528 கோடி நிதி திரட்டி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் ஐந்தாம் திகதி நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஜனாதிபதி பதவிக்கு கமலா ஹரிஸ் போட்டியிடுவதுடன் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் (Donald Trump) போட்டியிடவுள்ளார்.

இந்தத் தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் முதலாவது கறுப்பின மற்றும் ஆசிய அமெரிக்க பெண் என்ற வரலாற்று சாதனையை கமலா ஹரிஸ் படைத்துள்ளார்.

இந்தநிலையில், அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் கமலா ஹாரிஸ் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதுடன் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அவர் பிரசாரம் செய்து ஆதரவு திரட்டி வருகின்றார்.

மேலும், கமலா ஹரிஸின் பிரசாரத்துக்காக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 4528 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளமை அமெரிக்க தேர்தல் வரலாற்றில் மிகப்பெரிய சாதனை என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை