அபுதாபி பட்டத்து இளவரசருக்கும் , பிரதமர் மோடிக்கும் இடையில் சந்திப்பு !

user 10-Sep-2024 இந்தியா 27 Views

அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் 2 நாள் விஜயம் மேற்கொண்டு  நேற்று இந்தியாவிற்கு வருகை  தந்துள்ளார்.

அவருடன் அமீரகத்தின் பல்வேறு துறை அமைச்சர்கள்  மற்றும் வர்த்தக பிரதிநிதிகள் அடங்கிய உயர்மட்டக் குழுவும் இந்தியாவிற்கு  வருகை தந்துள்ளது.

பட்டத்து இளவரசராக முதல் முறையாக இந்தியா வந்த அவருக்கு டெல்லியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் அவரை மத்திய வர்த்தக அமைச்சர்  பியூஸ் கோயல் வரவேற்றார். பின்னர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், அபுதாபி பட்டத்து இளவரசர் டெல்லியில் பிரதமர் மோடியை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பின்போது பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசித்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்முவையும் அபுதாபி பட்டத்து இளவரசர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். டெல்லியில் இன்றைய நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு நாளை மும்பை செல்லும் பட்டத்து இளவரசர், அங்கு இரு நாடுகளின் வர்த்தக பிரமுகர்கள் பங்கேற்கு நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளார்.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை