அமெரிக்கா பயணமான தமிழ் நாட்டு முதல்வர் ஸ்டாலின் !

user 28-Aug-2024 இந்தியா 38 Views

தமிழ் நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று இரவு சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய் வழியாக அமெரிக்கா புறப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழகத்தை 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டொலர் பொருளாதார மாநிலமாக மாற்ற முதல்வர் ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்திருக்கிறார்.

இதற்காகவே பல்வேறு புதிய தொழில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அத்துடன், தொழிலை எளிமையாக்கும் விதமாக பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு, அதற்கான கொள்கைகளும் வெளியிடப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே சென்னையில் கடந்த ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டு, அதன்மூலம் 6 இலட்சம் கோடி ரூபாய்களுக்கும் அதிகமான முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதனையடுத்து தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக பல்வேறு நாடுகளுக்கும் முதல்வர் ஸ்டாலின் பயணம் மேற்கொண்டார்.

இந்த பயணத்தின் மூலம் 10 ஆயிரம் கோடி ரூபாய்களுக்கும் அதிகமான முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

அந்த பயணங்களின்போது, துபாய், அபுதாபி, சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் உட்பட பல்வேறு நாடுகளுக்கு சென்று முதலீட்டாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்..

இதன் தொடர்ச்சியாகவே ஸ்டாலின் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

இந்த பயணத்தின் மூலம் தமிழகத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்படும் என்றும், பல ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை சன்பிரான்சிஸ்கோ செல்லும் முதல்வர் ஸ்டாலின், அங்கு நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்பதுடன், தொழில் தொடங்க தமிழகம் வருமாறு முதலீட்டாளர்களுக்கு அவர் அழைப்பு விடுக்க உள்ளார்.

இதன்போது முக்கிய முதலீடுகளுக்கான ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளதாக கூறப்படுகிறது. எதிர்வரும் 31-ம் திகதியன்று, புலம்பெயர்ந்த தமிழர்களுடன் கலந்துரையாடவுள்ளார்.

செப்டம்பர் 2ம் திகதி சிக்காகோ செல்லும் முதல்வர் ஸ்டாலின், 12ம் திகதி வரை அமெரிக்காவில் தங்கியிருப்பார்.

இதன்போது கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் நிர்வாகிகளையும் அவர் சந்திக்க உள்ளார். மேலும் செப்டம்பர் 7ம் திகதியன்று அயலக தமிழர்கள் உடனான சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.   

 

 

 

 

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை