பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்கு தப்பியோட்டம்

user 22-Mar-2024 இலங்கை 8 Views

பாதாள உலகக்குழு உறுப்பினர்களை சட்டவிரோதமான முறையில் வெளிநாடு அனுப்பிவைப்பதற்காக பாரியளவு மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் வெளிநாடு தப்பிச்செல்வதற்காக மோசடியான முறையில் கடவுச்சீட்டுக்கள் பெற்றுக்கொண்டுள்ளனர்.

இதற்காக கடவுச்சீட்டு ஒன்றுக்கு ஐந்து இலட்சம் ரூபா வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்தின் சில மோசடியான அதிகாரிகள் இவ்வாறு பணம் பெற்றுக்கொண்டு போலிக் கடவுச்சீட்டுக்களை வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளது.

குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் பிரதி கட்டுப்பாட்டாளர்கள் இருவர் உள்ளிட்ட சிலர் நீண்ட காலமாக இவ்வாறு மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளமை விசாரணைகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

ஹினடியான மகேஸ், மதுகம ஷான் உள்ளிட்ட பாதாள உலகக்குழு தலைவர்கள் மற்றும் ஐந்து உறுப்பினர்களுக்கு போலியான கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளன.

போலி கடவுச்சீட்டு வழங்கிய குற்றச்சாட்டில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகள் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதாள உலகக்குழு உறுப்பினர்களை போலி கடவுச்சீட்டுக்கள் மூலம் டுபாய்க்கு அனுப்பி வைப்பதற்காக இவ்வாறு ஒரு கடவுச்சீட்டுக்கு ஐந்து இலட்சம் ரூபா பணம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

 

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை