மனித மூளையில் Neuralink சிப்!

user 22-Mar-2024 பொருளாதாரம் 7 Views

எலான் மஸ்க் நிறுவனமான நியூரோலிங், மூளை-கணினி இடைமுக தொழில்நுட்பத்தில் (BCI) முன்னேற்றம் கண்டுள்ளது.

எலோன் மஸ்கின் நரம்பு-கணினி இடைமுக தொழில்நுட்ப(BCI) நிறுவனமான நியூரோலிங் குறிப்பிடத்தக்க சாதனை ஒன்றை எட்டியுள்ளது.

நியூரோலிங் நிறுவனம்(Neuralink) சமீபத்திய நேரலை ஒளிப்பரப்பில், தங்களது முதல் மனித நோயாளி நோலன் அர்பாக், அவரது மூளையில் பொருத்தப்பட்ட கருவியைப் பயன்படுத்தி கணினி கர்சரை(cursor) கட்டுப்படுத்தி ஆன்லைன் செஸ் விளையாடுவதை அவர்கள் காட்சிப்படுத்தினர்.

நீச்சல் விபத்தில் தோள்பட்டையில் இருந்து கீழ் பகுதி முடங்கிய 29 வயதான நோலன் அர்பாக்(Noland Arbaugh), இந்த தொழில்நுட்பத்தின் திறனை உதாரணப்படுத்துகிறார்.

இந்த மூளை இணைப்பு, அவரது சிந்தனை சமிக்ஞைகளைத் திரையில் செயல்களாக மாற்றி, உடல் அசைவுகள் இல்லாமல் கர்சரை நகர்த்தவும் செஸ் நகர்த்தல்களை செய்யவும் அனுமதிக்கிறது.

இந்த சாதனை ஜனவரியில் அர்பாக் மீது நியூரோலிங் வெற்றிகரமாக மூளை அறுவை சிகிச்சை செய்ததைத் தொடர்ந்து வருகிறது.

முன்னதாக அறிக்கைகள் அவர் தனது மூளையை கொண்டு கணினி சுட்டியை கட்டுப்படுத்தும் திறனை வெளிப்படுத்தி இருந்தன. இந்த புதிய செயல்விளக்காட்டுதல், மூளை-கணினி இடைமுகங்களைப் பயன்படுத்தி சிக்கலான தொடர்புகளுக்கான திறனையும் முன்னிலைப்படுத்தி உள்ளனர்.

 

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை