பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

user 24-Mar-2024 உலகம் 5 Views

பப்புவா நியூ கினியாவின் வடக்கே தொலைதூர பகுதியில் இன்று(24) அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அம்புந்தி பகுதியில் இருந்து வடகிழக்கே 32 கிலோமீற்றர் தொலைவில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்நிலநடுக்கம் 35 கிலோ மீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தாலும் இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.

அத்தோடு நிலநடுக்கத்திற்கான தாக்கம் அதிகம் ஏற்பட கூடிய பகுதியில் பப்புவா நியூ கினியா உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தென்கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பெருங்கடலோர பகுதிக்குட்பட்ட நிலநடுக்கம் அதிகம் ஏற்பட கூடிய இடத்தில் அது அமைந்துள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரலில் இதுபோன்று பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்ப்பட்டதுடன் இது ரிக்டரில் 7.0 ஆக பதிவாகி இருந்தது.  மேலும் குறித்த அனர்த்தத்தில் சிக்கி ஏழு பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை