சர்வதேச T20 தரவரிசையில் புதிய உச்சத்தை தொட்ட சமரி அத்தபத்து!

user 02-Sep-2026 பொழுதுபோக்கு 44 Views

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அத்தபத்து, தனது கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) T20 தரவரிசையைப் பதிவு செய்துள்ளார்.

துடுப்பாட்டம், பந்துவீச்சு மற்றும் சகலதுறை வீராங்கனைகளுக்கான தரவரிசைகளில் ஒரே நேரத்தில் தனது அதிகபட்ச நிலைகளை சமரி அத்தபத்து பெற்றுள்ளார்.

நேற்று (01) வெளியிடப்பட்ட புதிய மகளிர் T20 தரவரிசையில், துடுப்பாட்ட வீராங்கனைகளுக்கான தரவரிசையில் 6ஆவது இடத்தையும், சகலதுறை வீராங்கனைகளுக்கான தரவரிசையில் 3ஆவது இடத்தையும், பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் 33ஆவது இடத்தையும் அவர் பெற்றுள்ளார்.

இதன்மூலம், மூன்று பிரிவுகளிலும் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் சிறந்த தரவரிசை நிலைகளை சமரி அத்தபத்து எட்டியுள்ளார்.

இதேவேளை, மகளிர் ஆசியக் கிண்ண T20 கிரிக்கெட் தொடரின் ஆறாவது போட்டியில் இலங்கை அணி இன்று இந்தோனேசிய அணியை எதிர்கொள்ளவுள்ளது.

டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டி இலங்கை நேரப்படி இரவு 8.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை அணி தனது முதல் போட்டியில் ஐக்கிய அரபு இராச்சிய அணியை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி வெற்றியுடன் தொடரை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை