எடிசன் விருதை வென்ற ‘ஐயோ சாமி” பாடல்!

user 27-Mar-2024 பொழுதுபோக்கு 5 Views

சென்னையில் நடைபெற்ற 16ஆவது எடிசன் விருதுகள் விழாவில் ‘ஐயோ சாமி நீ எனக்கு வேணாம் என்ற பாடலுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது.

 

பொத்துவில் அஸ்மினின் வரிகளில் சனுக விக்கிரமசிங்க மூலம் இயக்கப்பட்டு வின்டி குணதிலக பாடிய ‘ஐயோ சாமி நீ எனக்கு’ என்ற பாடல் 2023ஆம் ஆண்டுக்கான உணர்வுபூர்வமான, பாடல் விருதைப் பெற்றுள்ளது.

தமிழ்நாடு சென்னையில் நடைபெற்ற 16 ஆவது எடிசன் விருது வழங்கும் விழாவில் 2023 ஆம் ஆண்டின் சிறந்த உணர்வுப்பூர்வமான பாடலுக்கான விருது ஐயோ சாமி என்ற பாடலைப் பாடிய வின்டி குணதிலகவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருதைப் பெற்றுக் கொண்ட அவர் நேற்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
இதற்கு முன்னதாக விமானத்திற்குள்ளேவைத்து அவருக்கு கேக் வெட்டி பாராட்டும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சர்வதேச திரைப்படப் பாடல்களை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கும் விழா சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்றது.

பாடலை எழுதிய பொத்துவில் அஸ்மின் மற்றும் இசை அமைத்த சனுக விக்கிரமசிங்க ஆகியோரும் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டனர்.

ஐயோ சாமி பாடலைப் பாடிய வின்டி குணதிலகவுக்கு 2023 ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட சிறந்த உணர்ச்சிப் பாடலுக்கான விருது வழங்கப்பட்டது.

அவரை வரவேற்க நேற்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மக்கள் திரண்டிருந்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த வின்டி குணதிலக்க, சர்வதேச விருதை நான் பெறுவது இதுவே முதல் முறை என்றும் இலங்கைக்கு சர்வதேச விருது ஒன்றை பெற்றுக்கொடுத்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை